போர்ச் சுமைக்குப் பதிலாக தற்போது வரிச்சுமை
போர் இடம்பெற்ற காலப்பகுதியில் போர்ச் செலவு காரணமாக பொருட்களின் விலையைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதிருப்பதாக அரசாங்கம் அறிவித்து வந்தது.
எனினும், தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில் பொருட்களின் விலையைக் குறைப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதற்குமாறாக தற்போது அனைத்துப் பொருட்களுக்கும் உச்ச
அளவிலான வரி அறவீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த புதிய வரிகள் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக
அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது மக்கள் போர்ச் சுமைக்குப் பதிலாக வரிச்சுமைக்கு
ஆளாகியுள்ளனர்.
570 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பால்மாவிலிருந்து 125 ரூபா, 132 ரூபாவிற்கு விற்பனை
செய்யப்படும் பெற்றோல் லீற்றரில் 75 ரூபா, 315 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம்
நெத்தலிக் கருவாட்டிற்கு 30 ரூபா, 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் டின் மீனிலிருந்து 80 ரூபா
என்ற வகையில் வரி அறிவிடப்படுகிறது.