இலங்கை சிட்டிசன் ஒருவரின் தனி நபர் கடன் 163,425 ரூபாவாக அதிகரித்துள்ளது

2009ம் ஆண்டு ஓகஸ்ட் 31ம் திகதி வரையில் இலங்கையின் தனி நபர் ஒருவின் கடன் 163,425 ரூபாவாக அதிகரித்துள்ளது.


இந்தக் கடன் தொகையானது இதுவரை இருந்த அதிகூடிய தனிநபர்
கடனாக கணிக்கப்பட்டுள்ளது.


 உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் தொடர்ச்சியாக கடன்பெற்று வருகின்றமையே இதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது. இதனைத்தவிர கடந்த ஓகஸ்ட் 31ம் திகதி வரை மகிந்த சிந்தனைக்கமைய மாத்திரம் பெறப்பட்ட கடன் தொகை 3,301 பில்லியன் ரூபாவாகும்.

இதில் 1,916 பில்லியன் ரூபா உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதனைத் தவிர 1,385 பில்லியன் ரூபா சர்வதேச ரீதியாக பெறப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் 1,504 மில்லியன் அமெரிக்க
டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment