ஊடகங்களை அடக்குபவர்கள் நாட்டிற்கு கேடு விளைப்போர் - இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்

இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்திற்காக தொடர்ந்தும் பாடுபடப்போவதாக இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பற்றீசியா ஏ பியூ டெனிஸ் தெரிவித்துள்ளார்.

ஊக்கமும், ஆக்கமும் உள்ள சுதந்திரமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான
அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பாரியளவிலான ஊடக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அமெரிக்காவிற்கான புதிய தூதுவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கெதிராக கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் ராஜபக்ஸ அரசாங்கத்தினால் நசுக்கப்படுவதுடன், ஊடகங்கள் தற்போது சுயதணிக்கையைப் பேணிவருவதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment