பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து குரங்குக் காய்ச்சல் பரவுகிறது
பன்றிக் காய்ச்சல் பீதி ஓய்வதற்கு முன்பே, தென்கிழக்கு ஆசிய நாடு களில் புதிதாக குரங்குக் காய்ச்சல் இப்போது பரவத் தொடங்கியுள்ளது.மலேசியா, இந்தோனேசியாவில் காணப்படும் இது, இந்தியாவுக்கு வர வாய்ப்புக் குறைவு என்பது ஆறுதல். குரங்குகளைத் தாக்கி நோய்வாய்ப் பட வைக்கும் வைரஸ், இப்போது மனிதனுக்கும் பரவுவது தெய வந்துள்ளது.
நீண்ட வால், குட்டை வால் குரங்குகளை மட்டுமே தாக்கும் இந்த வைரஸ், மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் சில மனிதர்களிடம் தொற்றியுள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.
கொசுக்களால் ஏற்படும் மலேரியா காய்ச்சல் வகையைச் சேர்ந்தது இது.
நோயால் பாதிக்கப்பட்ட குரங்கிடம் இருந்து இந்த வைரஸ் வெளியாகி, கடந்த ஆண்டு தொடக்கம் தலே மலேசியாவில் மனிதர்களை தாக்கத் தொடங்கியது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதில் 3ல் 2 பங்கினரை குரங்குக் காய்ச்சல் வைரஸ் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். மலேசியாவை அடுத்து இந்தோனேசியாவிலும் குரங்குக் காய்ச்சல் இப்போது பரவியுள்ளது தெய வந்தது. குரங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவாது என்றாலும் தீவிர பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இந்த வைரஸ் தாக்கினால் உடலின் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இரத்த ஓட்ட பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எச்சக்கப் பட்டுள்ளது.
குரங்குக் காய்ச்சலுக்கு சரியான நேரத்தில் றையாக மருத்துவம் செய்யத் தவறினால் சிறுநீரகங்களை பாதிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சத்துள்ளது.
எனவே, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குரங்குக் காய்ச்சல் வைரஸ் இந்தியாவுக்கு வந்து விடா மல் இருக்க இந்திய மத்திய அரசு தீவிர கண் காணிப்பை தொடங்கியுள்ளது. எனினும், நீண்ட வால் குரங்கு, குட்டை வால் குரங்குகளிடம் மட்டுமே இந்த வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.