ஆனையிறவு ரயில் நிலையத்துக்கு சிங்கள பெயர்!!!
வடக்கின் வசந்தம் என்ற பெயரில் மகிந்த அரசு சில திட்டங்களை வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்கமைய ஆனையிறவு ரயில் நிலையத்தை நவீன மயப்படுத்தும் திட்டம் ஒன்றும் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தின் கட்டுமான பணிகளுக்காக பாடசாலை மாணவர்களிடம் இருந்தும் நிதி சேகரிக்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நிதி சேகரிப்பு எதிர்பார்த்ததை விட வரவேற்புப் பெற்றிருப்பதாகவும், இப்போது 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனையிறவு ரயில் நிலையத் திட்டத்துக்கு நிதியுதவி வழங்க விரும்பும் மாணவர்கள் குறைந்த பட்சமாக 2 ரூபா செலுத்தலாம் எனக் கூறியுள்ள கல்வி அமைச்சு இந்த நிதி பங்களிப்பில் வட மாகாண மாணவர்கள் தவிர்ந்த பிற மாகாண மாணவர்களிடம் இருந்தே இதைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆனையிறவு ரயில் நிலையம் என்ற பெயரை மாற்றி "சேனஹசாக தொட்டுபல" என்பதாக புதிய பெயர் வைக்கும் எண்ணத்திலும் கல்வி அமைச்சு உள்ளது. இத்திட்டத்தை கல்வி அமைச்சும், போக்குவரத்து அமைச்சும் நடைமுறைப்படுத்துகின்றன.