கிழக்கில் எந்தவித உதயமும் இல்லை ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்களே அதிகம்
ஆயுதங்களைக் கையளித்து விட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் கிழக்கில் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அங்கு சுதந்திரமான நடமாட்டத்திற்கான சூழல் இல்லை. எனவே, இது குறித்து அரசாங்கம் உய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர் தயா டி. கே.
கமகே கோக்கை விடுத்துள்ளார்.
கிழக்கின் உதயம் என்பது அரசினதும் அரச ஊடகங்களினதும் பொய்ப் பிரசாரமாகும். அங்கு எந்தவிதமான உதயம் இல்லை. மாறாக கொள்ளைகளும் காணிகளைக் கையகப்படுத்தல் வேலைத் திட்டங்களுமே நடந்தேறுகின்றன என்றும் அவர் சொன்னார்.
எதிர்க் கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே தயா கமகே இவ்வாறு தெவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க வேண்டியிருந்த கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் அபகத்துக் கொண்டது. இது யாவரும் அறிந்த உண்மையாகும். நாம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கே அவர்களிடம் ஆணை கேட்டோம். இருந்தும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரசாங்கம் கிழக்கை அபிவிருத்தி செய்வதாகக் கூறி தினம் எமது மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது.
கிழக்கில் அம்பாறை, திகாமடுல்ல போன்ற மாவட்டங்களில் 4 அல்லது 5 வருடங்களுக்கு ஒருறை வரட்சி ஏற்படுவது வழமையானதாகும். இந்த காலநிலைக்கு ஏற்ற வகையில் அரசாங்கம் எந்தவொரு செயற்றிட்டத்தையும் நடைறைப்படுத்தவில்லை.
தற்போது அங்கு பாரிய வரட்சி நிலை காணப்படுகின்றது. குடிநீர், விவசாயத்துக்கு தேவையான நீர் இல்லை. இதனால் 12 ஆயிரம் விவசாயக் குடும்பங்கள் பாரிய அவல நிலைக்குள்ளாகியுள்ளன. நீர்ப்பாசனத் திட்டங்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதிகளும் குறிப்பிட்ட சிலரது பொக்கட்டுகளுக்கே போய் சேர்கின்றன.
இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற வரட்சியை போக்குவதற்கு அரசாங்கம் உய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
கிழக்கு மாகாணம் வளங்கள் நிறைந்த பூமியாகும். மத்திய அரசாங்கத்தின் உதவியின்றியே கிழக்கின் வளங்களைப் பயன்படுத்தி கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் இருக்கின்றது. இருந்த போதிலும் அரசியல் வாதிகளின் சுரண்டல்கள் அங்கு அதிகத்துக் காணப்படுகின்றன.
வீண் விரயம், ஊழல், மோசடிகள், பாய அமைச்சரவை மற்றும் தாங்க டியாத வ என சகல விதத்திலும் நாட்டு மக்கள் அல்லல்படுகின்றனர். இதனை சீர்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலோ அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டமோ எதிர்கால சிந்தனையோ அரசிடம் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியானது எப்போதும் தூர நோக்குடனேயே செயற்படும் கட்சியாகும்.
இதனைக் கருத்திற் கொண்டே எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஆதரவளித்து செயற்பட்டு வந்தோம். இருப்பினும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவின் சுயநலப் போக்கு எமக்கு அதிருப்தியளித்துள்ளது. எனவே தான் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதாரத் துறை சுய சேவையாளர்களை உள்வாங்குவதில் அமைச்சன் செயற்பாடுகளில் திருப்தி ஏற்படாமையால் சபையின் 75 வீதமானோர் அவருக்கு எதிராக நிற்கின்றனர் என்றார்
