தமிழர் பரம்பரைச் சொத்துக்கள் கொழும்பில் விற்பனை செய்யப்படுகின்றன


வன்னியின் தொல்பொருள் தளங்களிலிருந்து ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிமிக்க பண்டைக்காலப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள்,
பெறுமதிவாய்ந்த சிலைகள் ஆகியவை கொழும்பு தொல்பொருள் சந்தையில் வைத்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. போர் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறான பொருட்களை விடுதலைப்புலிகள் மதித்து பேணி, காத்தும் வந்தனர்.

இதற்கென புத்த சிலைகள் உட்பட பெருந்தொகையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வன்னி மியூசியம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.

1990 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ராணுவத்தினர் அங்கிருந்த பண்டைக்கால பொருட்களைத் திருடி விற்றுள்ளனர். போரிற்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் தொன்மைக்காலச் சின்னங்களை அழிப்பதும் கொள்ளையிடுவதும் கூட நீண்ட காலமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் இலங்கை ராணுவத்தால் 1982 இல் யாழ் நூலக எரிப்பு, யாழ் பல்கலைக்கழகத்தின் மியூசியம் இந்திய ராணுவத்தால் எரிப்பு என்பவற்றைக் கூறலாம்.

ஆக மொத்தத்தில் ஈழத் தமிழனின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொன்மை என்பனவற்றை அழித்து ஒரு இனத்தை நாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு கொடிய அரக்கன் சிங்களவன்.

0 comments:

Post a Comment