சர்வதேச சூழ்ச்சி மேற்கொள்வதாக குற்றஞ்சுமத்தி ரணில், மங்கள ஆகியோரை கைதுசெய்வதற்கு அரசு இரகசி திட்டம்



மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன் ஜனாதிபதியைக் கொலை செய்து, அரசாங்கத்தின்
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக குற்றஞ்சுமத்தி ரணில் 

விக்ரமசிங்கவயும், மங்கள சமரவீரவையும் கைதுசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கத்தின் மிகவும் நம்பகரமான தகவலொன்று தெரிவித்தது. 
எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டமைப்பு கையெழுத்திடுவதற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

தமது பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மேலதிக தகவல்களை வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சரொருவர் மேலும் தகவல் தருகையில்,


ரணில், மங்கள ஆகியோரைக் கைதுசெய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி
  செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான சூழலை உருவாக்குமாறு போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இவர்கள் இருவரும் கைதுசெய்யப்படுவதற்கான குற்றச்சாட்டுக்களை சரியான முறையில் முன்வைப்பதற்கான பொறுப்புக்கள் கோதாபய ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சுமத்தி சுதந்திரத்தின் மேடை| அமைப்பின் தலைவர்கள் சிலரையும் எதிர்வரும் நாட்களில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தகவலளித்தார்.



ஜனாதிபதியைக் கொலை செய்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி இடம்பெற்றுவருகிறது என்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் சில வாரங்களுக்கு முன்னெடுத்துச் செல்லுமாறும் அதுதொடர்பாக மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் மகிந்த ராஜபக்ஸ முன்னணியின் ஊடகத்தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவரது ஊடகக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அமைச்சர் டக்ளஸினால் அழைக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் தினமின ஆசிரியர் மகிந்த அபேசுந்தர, சுயாதீனத் தொலைக்காட்சியின் சுதர்மன் ரதெலியகொட, திவயின பத்திரிகையின் மனோஜ் அபேதீர, லங்காதீப பத்திரிகையின் பிரசன்ன சஞ்சீவ தென்னகோன் உள்ளிட்ட ஊடகவியலாளர் சிலரும் ஊடகத்துறை அமைச்சின் ஆலோசகரான கலாநிதி சரித்த ஹேரத்தும் கலந்துகொண்டனர்.

மேற்குலக நாடுகள் மற்றும் சி.ஐ.ஏ. அமைப்பு போன்றவை சர்வதேசத் தலைவர்களைக் கொலை செய்து மேற்குலகிற்கு சார்பான எதிர்க்கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்திய விதத்தை உதாரணங்களுடன் சில வாரங்களுக்கு பிரச்சாரப்படுத்துமாறு டளஸ் அழகப்பெரும இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக விமர்சன ரீதியான தாக்குதல்களை முன்னெடுக்குமாறும் மகிந்த ராஜபக்ஸ முன்னணியின் ஊடகவியலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment