முகாம் மக்களை விடுவிக்க சர்வதேச தலைவர்கள் இலங்கைக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும்


முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என அந்த கண்காணிப்பகம் கோரியுள்ளது.

குறித்த முகாம்களில் பாதுகாப்புச் சீர்கேடு காரணமாக அதிகளவான மக்கள் காணாமல் போகின்றனர். மேலும் முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தவிர எதிர்வரும் பருவப்பெயர்ச்சிக் காலத்தின்போது சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வாரம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், உலக தலைவர்கள் இந்த கோரிக்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment