புலிகள் சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த அமைப்பினராகவே காணப்படுகின்றனர்.



விடுதலைப் புலிகள், இலங்கைக்குள் தோற்கடிக்கப்
பட்டிருந்தாலும் சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த அமைப்பினராகவே  காணப்படுகின்றனர்.  சர்வதேச மட்டத்தில் மிகவும் பலமாகச் செயற்பட்டுவரும் புலிகள் இலங்கைக்கு எதிராக சர்வதேச சகத்தைத் திசைதிருப்பி வருகின்றனர் என்று சர்வதேச வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ஜி.எல். பீஸ் தெவித்தார்.

அமெக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்தக்குற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னணியிலும் விடுதலைப்புலிகளே உள்ளனர். அவர்களது சர்வதேச தியிலான பலமே இதற்குக் காரணமாகும். எனவே, இந்தச் சவாலுக்கு முகம்கொடுக்க நாம் தயாராகவேண்டும். சர்வதேச மட்டத்தில் இலங்கை பாரதுரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 அவர்கள் சர்வதேச மட்டத்தில் சிறந்த பலத்துடன் காணப்படுகின்றனர். கடந்த 25 வருடங்களாக அவர்கள் சேகரித்த நிதியுடன் மிகவும் பலமான சர்வதேச தொடர்பு வலையமைப்பை கொண்டுள்ளனர். அதனை நாங்கள் புந்துகொள்வதுடன் அதற்கு முகம்கொடுக்க தயாராகவேண்டும்.

பாரதுரமான நிலைமை இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் மிகவும் பலமாக செயற்பட்டுவரும் புலிகள் திட்டமிட்டவாறு இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தை திசைதிருப்பி வருகின்றனர்.

அதாவது எமது நாட்டின் மக்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாகவும் எனவே படையினரை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றும் அமெக்காவின் செனட் சபையில் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் புலிகளின் சர்வதேச பலமே காணப்படுகின்றது. எனவே தற்போதைய நிலைமையில் சர்வதேச மட்டத்தில் பாய அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். இது மிகவும் பாரதுரமான நிலைமையாகும். புலிகள் எமக்கு எதிரõக சர்வதேசத்தை பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒருபோதும் படையினரை யுத்த நீதிமன்றத்துக்கு அனுப்பமாட்டேன் என்று ஜனாதிபதி அண்மையில் அல மாளிகையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் குறிப்பிட்டார்.

மேலும் முப்படைகளின் தளபதி என்ற வகையில் தான் இட்ட கட்டளைகளையே படையினர் நடைறைப்படுத்தினர் என்றும் தான் தனித்து சவால்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறானதொரு கௌரவமிக்க தலைவரே எமக்கு இருக்கின்றார்.

மக்கள் அச்சமின்றி நடமாடுகின்றனர். அந்த வெற்றியை பாதுகாக்கவேண்டும் என்று தென் மாகாண மக்கள் கருதுகின்றனர். இந்த வெற்றியை பாதுகாக்கவேண்டுமாயின் அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனை மக்கள் உணர்ந்துள்ளனர். அதாவது 90 வீதத்தினால் ஆளும் கட்சியை வெற்றிபெறவைக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒத்திகை 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் பிரதேச நிதித்துவ தேர்தல் றையில் ன்றில் இரண்டு பெரும்பான்மையை எந்தக்கட்சியாலும் பெறமுடியாது. ஆனால் அந்த எண்ணப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேள்வி: சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களுக்கு வெளிவிவகார அமைச்சு முறையாக பதிலளிப்பதில்லை என்றும் அவரை நீக்கிவிட்டு உங்களை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறும் கோரப்படுகின்றதா?

பதில்: அது இதற்கு தொடர்பில்லாத விடயம்.

கேள்வி:வெளிவிவகார அமைச்சு ஏன் முறையாக சர்வதேசத்துக்கு பதிலளிப்பதில்லை?

பதில்: வெளிவிவகார அமைச்சு பதிலளிக்கவில்லை என்று எவ்வாறு நீங்கள் கூறலாம். புலிகளின் சர்வதேச பலத்தை நீங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.அதற்கு நாங்கள் முகம்கொடுக்கவேண்டும். தல் சவாலை நாங்கள் வெற்றிகண்டோம்.
புலிகள் உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டனர். அடுத்த சவாலாக தற்போது அவர்களின் வெளிநாட்டு பலத்தை றியடிக்கவேண்டும். ன்றாவது சவாலாக பொருளாதாரத்தை கட்டியெழுப்பவேண்டும்.

கேள்வி: தென் மாகாண சபை தேர்தலில் உங்கள் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா?

பதில்: இது விருப்பு வாக்குறைமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். விருப்பு வாக்கு றைமையினால் எமது அரசியல் கலாசாரத்துக்கு அபகீர்த்தி ஏற்படுகின்றது. அரசியலின் சயில்லாத பக்கம் விருப்பு வாக்கு றைமையினால் வெளிக்காட்டப்படுகின்றது. கட்சிகளுக்கு இடையே என்ற நிலைமை மாறி கட்சிக்குள் பிரச்சினை ஏற்படுகின்றது.

 சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால் 95 வீதமான மக்கள் விருப்பு வாக்கு றைமையை எதிர்ப்பர். இதேவேளை கட்சியின் ஒழுக்க நெறி றைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திபால சிறிசேனவும் திட்டவட்டமாக தெவித்துள்ளனர்.

கேள்வி: அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மக்கள் விடுதலை ன்னணியின் 17 அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்படுகின்றதே?

பதில்: மக்கள் விடுதலை முன்னணி முறைப்பாடு செய்துள்ளமை போன்று எமது கட்சியும் முறைப்பாடுகளை செய்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் உய விசாரணைகளை மேற்கொள்வர்.

0 comments:

Post a Comment