ஆவுஸ்ரேலியா சிட்னியில் “ஏங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” -
ஆவுஸ்ரேலியா சிட்னியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” இன்நிகழ்வு செப்டம்பர் மாதம் 26ம் திகதி சில்வர் வோட்டர் பூங்பாவில் (Silverwater Park) இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண்முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண்கூடே தத்ரூபமாக காணமுடியும்.
அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செயல்பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். நாம் விரைந்து ஒன்றுகூடி எமது உணர்வுகளை பகிர்ந்துகொண்டு எமது உறவுகளின் விடிவுக்காக நாம் செயல்படுவதை வலியுறுத்த வேண்டும்.
முன்னை விட உலகம் தமிழர் விடயத்தில் இப்போது மௌனம் சாதிக்கிறது. துமிழர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமைமீறல்கள், சித்திரவதைகளை தடுக்க எந்த வெளிநாட்டு அரசாங்கமோ, ஏனைய உலக அமைப்புகளோ நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. தமிழர்களின் விடிவுக்காக போராட வேண்டிய நிர்ப்பந்தம் புலம்பெயர் தமிழ் சமுதாயத்தின் தோள்களிலேயே இருக்கின்றது.புலம்பெயர் தமிழர் ஒன்று கூடி எமது பலத்தை உபயோகித்தே எமது தமிழ் உறவுகளின் தேவைகளை பூர்த்திசெய்ய எதிர்வரும் தடைகளை உடைத்தெறிந்து அவர்களை சிறைக்கூட முகாம்களில் இருந்து விடீவிக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
சிட்னியில் வரும் செப்ரம்பர் 26ம் திகதி சனிக்கிழமை 10 மணி தொடக்கம் 1 மணி வரை சில்வர் வோட்டர் பூங்காவில்(Silverwater Park, Clyde Street, Silverwater)
அவுஸ்ரேலிலயாவின் தலைநகர் கன்பராவில் வரும் செப்ரம்பர் 27ம் திகதி ஞாயி;ற்றுக்கிழமை 10 மணி தொடக்கம் 1 மணி வரையும்
மெல்பேர்ணில் வரும் ஒக்டோபர் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணி தொடக்கம் 1 மணி வரையும் நடைபெற இருக்கின்றது. இவ்நிகழ்வுகளில் பெரும் திரளாக கூடி உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு தமிழ் உறவுகளை காக்கும் பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்.