கொல்கத்தாவில் நிறுத்தப்பட்ட அரபு நாட்டு விமானம் : அமெரிக்க ஆயுதங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல்கள்

கொல்கத்தாவில் சுங்க இலாகா அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானத்தில் இருந்த ஆயுதங்கள் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டதாகப் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவிற்கு சென்ற அரபுநாட்டு விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக, அண்மையில் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது அதில் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, விமானம் அங்கிருந்து செல்வதற்கு சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இதனிடையே அரபுநாட்டு அதிகாரிகள் விளக்கமளித்ததை அடுத்து, கடந்த 4 தினங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமானம், அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு இந்திய அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இந்நிலையில், சீனாவில் அண்மைக்காலமாக கலவரம் நிகழ்ந்துவரும் சியாங் யாங் பகுதியில் உள்ள போராட்டக்குழுவினருக்கு வழங்குவதற்காக ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காதான் இந்த ஆயுதங்களை அரபுநாட்டு விமானம் மூலம் அனுப்பி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1 comments:

  1. உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) says

    எதிரிய கூட நம்பலாம் இந்த அமெரிக்கன நம்பவே புடாது ........... (இது நம்ப டெல்லி தலைங்களுக்கு எப்பதான் புரயுமோ )

    செய்திக்கு நன்றி .............


Post a Comment