இன்று காலை மயிலாம்பாவெளியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 18 பேர் காயம்
மட்டக்களப்பு – வாழைச்சேனை வீதியிலுள்ள மயிலம்பாவெளியில் இன்று காலை இ.போ.ச. பஸ் - தனியார் பஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் இரு சாரதிகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண்கள் குழந்தைகள் உட்பட காயமடைந்த 18 பேரும் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த வாழைச்சேனை இ.போ.ச டிப்போ பயணிகள் பஸ்ஸும் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் பஸ் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றைக் கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.