மலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதிகள் -ஆவணப்படம்

ஈழத்தமிழ் அகதிகள் குழுவொன்று படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் வழியில் அகப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.
  அதேநேரம் அந்த அகதிகள் அனைவரும் மலேசியாவில் இருந்து புறப்பட்டவர்கள் என்ற செய்தி அதிகம் அறியப்படவில்லை. அவுஸ்திரேலியாவின் தொலைக்காட்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் மலேசியா சென்று, அங்கே அகதிகள்படும் இன்னலை வெளிக் கொண்டு வந்துள்ளனர். மோசமான மனித உரிமை மீறல்களைப் புரியும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அதிரடிப்படை, UNHCR மூலம் பதிவு செய்த அகதிகளையும் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து வைக்கின்றது. பெரும்பாலானோர் கோலாலம்பூர் நகருக்கு வெளியே உள்ள தடுப்பு முகாமுக்குள் மாதக் கணக்காக வதை படுகின்றனர். மலேசிய அரசு அகதிகளை கடுமையாக நடத்துவது அவுஸ்திரேலிய அரசுக்கும் ஏற்புடையதாக உள்ளது. SBS தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த ஆவணப்படம், அவுஸ்திரேலியா, மலேசியாவின் மனிதநேயமற்ற மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.

0 comments:

Post a Comment