வவுனியா இராமநாதன் காமில் தண்ணீருக்கு தட்டுப்பாடு பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பு

வவுனியா இராமநாதன் அகதி காமில் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் இம்காமிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும்

பாதிப்புகளை எதிர் நோக்குவதுடன் தமது அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாது அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


 கடந்த ஒரு வார காலமாகவே இவ்வாறு தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றதாக தெவித்த அம்காமிலுள்ளவர் மேலும் கூறியதாவது இம்காமில் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். எங்களுக்கு நாளொன்றுக்கு பத்து லீற்றர் குடி நீர் மாத்திரமே வழங்கப்படுகின்றது
இதனைக் கொண்டு எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள டியாத நிலையிலுள்ளோம்.


இங்கு வழங்கப்படும் பத்து லீற்றர் குடிநீரை மாத்திரம் வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது? எங்களுக்குய ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நாம் எங்கு செல்வது? இங்கு எங்களுக்கு வெளியிடங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதுமில்லை "நாங்கள் வெப்பத்தில் கிடந்து அநியாயமாக சாகப் போகின்றோம்' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.


தண்ணீர் தட்டுப்பாட்டினால் இங்குள்ள மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்குச் செல்ல டியாதுள்ளனர். எமது பிள்ளைகளிடம் இருப்பதுவோ ஒரேயொரு சீருடை, அதை மாத்திரமே அணிய வேண்டும். இவ்வாறு தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால் எமது பிள்ளைகள் அணிந்து செல்வதற்கு சீருடை கூட இல்லாமல் போகின்றது. இதனால் பாடசாலைக்குச் செல்ல டியாத நிலையும் ஏற்படுகின்றது.


றையாக பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க டியவில்லையே என்று எமது பிள்ளைகள் மன விரக்தியுடனும், ஏக்கத்துடனும் இருக்கின்றனர்.


எமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவது எமக்கு பெரும் வேதனையாக இருக்கின்றது. ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக உண்ண டியாத நிலையே இங்கு உள்ளது.


இம்காமில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் பெண் பிள்ளைகள் பெதும் பாதிக்கப்படுகின்றனர்.


பெண் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பெரும் பாதிப்பையே எதிர் கொள்கின்றனர். இதனை பார்க்கும் போது எமக்கு பெரும் வேதனையாக உள்ளது.


இதேவேளை உணவுக்காக எங்களுக்கு அசி, பருப்பு, எண்ணெய் மாத்திரமே வழங்கப்படுகின்றன.
இதனை கொண்டு நாம் எமது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள டியுமா? நாம் என்ன செய்வது? நாம் இதனை யாடம் சொல்வது? என்று பெரும் வேதனையுடன் தெவித்தார்.


எமது வேதனைகளை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நான் அதனை தெவிக்கின்றேன்.


இம்காமிலுள்ள சிறுவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற் கொண்டு உய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாகள் ன்வர வேண்டும்'' என்று அம்காமிலுள்ளவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment