இந்தியா எமது சிறந்த நண்பன் BBC க்கு பாலித கோகன்ன கூறியுள்ளார்


நேற்றைய தினம் BBC (hard talk) நிகழ்சியில் உரையாற்றிய பாலித கோகன்னவிடம் பல கடுமையான கேள்விகள் தொடுக்கப்பட்டது. முகாமில் காணாமல் போதல், 

இலங்கை இராணுவத்தின் படுகொலைகள், அகதிகள் எப்போது மீள் குடியமர்த்தப்படுவர் போன்ற கேள்விகளை BBC நிருபர் கேட்டிருந்தார். சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றிற்கு இலங்கை அரசு அனுமதிக்குமா எனக் கேட்டபோது, அதற்குப் பதிலளித்த பாலித கோகன்ன , இதனை இலங்கை அனுமதிக்காது என்று தெரிவித்தார்.

அத்துடன் இலங்கை மேற்குலக நாடுகளை எதிரியாகப் பார்க்கிறதா? எனவும், ஆசிய நாடுகளை அரவணைப்பதாகவும் ஒரு விடையம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த பாலித கோகன்ன, தாம் இறுதி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் இந்தியாவே தமக்குப் பெரிதும் உதவியதாக வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளார். அத்துடன் இலங்கை அரசின் நட்பு நாடுகளின் பட்டியலில் சீனாவையும், ரஷ்யாவையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவர் காணொளி   வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

 

0 comments:

Post a Comment