அரசாங்கம் பாரிய நிதிநெருக்கடிக்குள்! 7 மாத காலத்திற்குள் துண்டுவிழும் தொகை 3 ஆயிரம் கோடி ரூபா



இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும்

தொகை 3000 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகரித்துச் சென்று வரலாற்றில் உச்ச அளவிலான துண்டுவிழும் தொகையாக மாறியுள்ளதென பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை எட்டுவீதமாக வைத்திருக்கவே முயற்சித்துவந்தது. எனினும், அதுதற்போது 10.4 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.


அரசாங்கம் கடனுதவியைப் பெற்றுக்கொள்ளும் போது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது ஐந்து சதவீத மட்டத்தில் இருக்கவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த நிலையில், அதிகமான வீண் விரையம், அரசாங்கத்தின் செலவீனம் அதிகரித்தமை, எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமை போன்ற காரணங்களினால் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது 30 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்திருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment