தேசப்பற்றுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மக்களின் பணம் 162 மில்லியன் ரூபாவைச் சுருட்டியுள்ளார்


தேசப்பற்றுள்ளவராக தம்மைக் கூறிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து கட்சி தாவி ஆளும் கட்சிக்கு வந்த கெஹெலிய ரம்புக்வெல 162 மில்லியன் ரூபா மக்களின் பணத்தை சுருட்டியுள்ளமை தற்போது ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்குத் தாவிய கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கையளிக்கப்பட்டது. எனினும், அந்த பணியகம் ஈட்டிய லாபம் 162 மில்லியன் ரூபாவை ரம்புக்வல சுருட்டி விட்டதாக குருனாகலை மாவட்ட ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ரட்னாயக்கே கூறியுள்ளார். 

இந்த விவரங்களை அவர் நாடாளுமன்றத்தில் வெளியிட்டதோடு லங்கா ட்ருத் இணையத்தளமும் இதனை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமானது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகார சபையால் 1996ல் 5 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட இந்த பணியகமானது, 2008 வரை லாபகரமாக இயங்கிவந்து தேறிய லாபமாக 162 மில்லியன் ரூபாவை வைத்திருந்தது.
கெஹெலிய ரம்புக்வல அரசுடன் இணைந்தபோது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் நலன்புரி அமைச்சு அவரிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் அவருக்குக் கீழ் வந்தது. அப்போது 162 மில்லியன் ரூபா லாபத்துடன் இருந்த பனியகத்திடம் இப்போது ஒருசத பணமும் இல்லாத நிலையில் உள்ளது.

அண்மையில் பொதுச் சேவை ஆணையகத்தின் அனுமதி இல்லாமல், இப்பணியகத்தின் முகாமையாளர் பதவி ரஞ்சனி நாணயக்காரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் அமைச்சின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மாதாந்த சம்பளமாக 40,000 ஷரூபா, மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு 18,000 ரூபா மற்றும் அவரது கணவரின் வாகனத்துக்காக மேலும் ஒரு 40,000 ஷரூபா ஆகியன வழங்கப்படுகின்றன.

இவர் நாவலவில் காணி ஒன்று வாங்குவதற்காக, பணியகத்தின் 62 மில்லியன் ரூபா பணத்ததைச் செலவழித்துள்ளார். ஆனால் அந்த காணியை 42 மில்லியன் ஷரூபாவுக்கே வாங்கியிருக்க முடியுமாக இருந்தும் அவர் மேலதிகமாக 20 மில்லியன் செலுத்தியுள்ளார். இந்த காணி வாங்கும் விவகாரமானது அமைச்சர் ரம்புக்வெலவின் இணைப்புச் செயலாளரால் நடத்தப்பட்டுள்ளதோடு, இதற்காக கணக்காளர் கொடுக்க வேண்டிய அனுமதி இல்லாமலே பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, அமைச்சரின் பணியாளர்களின் பயன்பாட்டுக்கென 13 மில்லியன் ரூபா செலவில் இரு வாகனங்கள்
(WP-PB-7251/ WP-PB-7729)கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.  இதில் 
 WP-PB-7251வாகனம் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் வருண லசந்த பயன்படுத்துகிறார். அடுத்த வாகனமான WP-PB-7729 என்பது அனுரா வீரசிங்கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பணத்தில் 3 மில்லியன் ரூபா தேர்தல் பிரச்சாரங்களுக்காகச் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்பணத்தைப் பயன்படுத்தி 'குமா' என அழைக்கப்படும் நிறுவனத்திலிருந்து கட் - அவுட்டுகள் மற்றும் நாட்காட்டிகள் அச்சடித்து எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செலவுகளால் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. எனவே 35 பணியாளர்கள் இருந்த பணியகத்தில் 17 பேர் ஓய்வு பெறும்படி கேட்கப்பட்டுள்ளனர். பணியக விவகாரங்கள் எதிலும் தலையிடாத 17 பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் சுவாரசியமானது என்னவெனில், இந்த 17 பேருக்குமுரிய சம்பளங்கள் அனைத்தும் அமைச்சின் இணைப்புச் செயலாளரான அனுரா வீரசிங்கவின் வங்கிக் கணக்குக்குச் சென்றுள்ளது.

இதுவா நாட்டுப்பற்று, எங்களுக்கும் நாட்டுக்கும் தேசப்பற்று பற்றி போதிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் போர்வையின்கீழ் நடப்பது அனைத்தும் வஞ்சனை, மோசடி, லஞ்சம். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் 162 மில்லியன் ஷரூபா இவ்வாறு சுரண்டப்பட்டுள்ளது. மக்கள் இதை விளங்கிக் கொள்ள்வேண்டும். என்று கூறியுள்ளார் ரட்னாயக்கே.



13 மில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரங்கள்
 
விளம்பரத்திற்காக குமா நிறுவனத்திற்கான கொடுப்பனவு
 
17 ஊழியர்களின் சம்பளம், அநுர வீரசேகரவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டமைக்கான ஆவணம்
 
நாட்காட்டிகளை அச்சிட்டமைக்காக குமா நிறுவனத்திற்கு செய்யப்பட்ட கொடுப்பனவு
 
பணியகத்தின் வாகனங்கள் தனியாரின் பாவனைக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டமைக்கான கடிதம்

0 comments:

Post a Comment